உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்'- பிரதமர் மோடி- மேக்ரான் கூட்டறிக்கை


உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்- பிரதமர் மோடி- மேக்ரான் கூட்டறிக்கை
x
தினத்தந்தி 5 May 2022 6:50 AM GMT (Updated: 5 May 2022 6:50 AM GMT)

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போர் குறித்து இந்தியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.

பாரிஸ்,

பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  சுற்றுப்பயணத்தில் முதலில் ஜெர்மனி சென்றார். அடுத்த கட்டமாக அங்கிருந்து டென்மார்க் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் பிரடெரிக்சனை சந்தித்துப் பேசினார். 

டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இறுதியாக பிரான்ஸ் சென்றடைந்தார்.  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு நலன்கள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். 

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போர் குறித்து இந்தியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. அதில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கு இந்தியாவும் பிரான்சும் கவலை தெரிவிக்கின்றன. 

உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும்.  உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை இரு நாடுகளும் கண்டிக்கின்றன. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கும், மக்கள் பாதிப்புக்கு உள்ளாவது உடனடி நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story