ஹங்கேரி: மனைவியை தூக்கி கொண்டு ஓடும் கணவர்கள்... தெறிக்கவிடும் வித்தியாச ரேஸ் !

ஹங்கேரியில் மனைவியை கணவர்கள் தூக்கி கொண்டு சேற்றில் இறங்கி ஓடும் வித்தியாச ரேஸ் நடைபெற்றது.
ஹங்கேரி,
ஒரு சராசரி ஓட்டப்பந்தயத்தை பார்க்கும் போது, வீரர்கள் இலக்கை அடைவதற்கு எவ்வளவு மெனக்கிடுகின்றனர் என்பது தெளிவாக தெரியும். அவர்கள் ஓடுவதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும்.
அப்படி இருக்கையில், உடன் ஒருவரை முதுகில் சுமந்துகொண்டு ஓடுவது என்பது எவ்வளவு கடினமான ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஆனால் இந்த ஓட்டப்பந்தயத்தை ஹங்கேரியில் நடத்துகின்றனர். அதுவும் கணவன் மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் போட்டியானது அங்கு நடத்தப்படுகிறது.
இந்த போட்டியில் 30க்கும் மேற்பட்ட ஜோடிகள் பங்கேற்றனர்.கனவன் தன் மனைவியை முதுகில் தூக்கிக்கொண்டு சேறு, சகதி, டயர் போன்றவற்றை கடந்து ஓடும் காட்சியை பார்க்கும் போது, வேடிக்கையாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.
இந்த போட்டியானது நடத்த முக்கிய காரணம், தம்பதிகளிடையே புரிதல் அதிகரிப்பதற்காகவே என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story