கையிருப்பு தீர்ந்ததால் இலங்கை முழுவதும் கியாஸ் வினியோகம் நிறுத்தம்


கையிருப்பு தீர்ந்ததால் இலங்கை முழுவதும் கியாஸ் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 9 May 2022 4:55 PM GMT (Updated: 9 May 2022 4:55 PM GMT)

சமையல் கியாஸ் கையிருப்பு தீர்ந்து விட்டதால், நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

கொழும்பு, 

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் சமையல் கியாசுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கியாஸ் நிரப்பும் மையங்களில் மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து கியாஸ் பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் சமையல் கியாஸ் கையிருப்பு தீர்ந்து விட்டதால், நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய கையிருப்பு வரும் வரை கியாஸ் வினியோகம் செய்ய முடியாது என இலங்கையின் முன்னணி கியாஸ் நிறுவனமான லிட்ரோ கியாஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்து உள்ளது.

தற்போதைய நிலையில் தொழிற்சாலைகளுக்கான கியாஸ் மட்டுமே கையிருப்பு இருப்பதால், சமையல் கியாசுக்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவன தலைவர் விஜிதா ஹெராத் தெரிவித்து உள்ளார்.

அடுத்த கியாஸ் தொகுப்பு வருகிற வெள்ளி அல்லது சனிக்கிழமை தான் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story