ஆசியாவில் 950 கோடீசுவரர்கள், மும்பையில் 51 பேர்; ஆய்வு முடிவு வெளியீடு


ஆசியாவில் 950 கோடீசுவரர்கள், மும்பையில் 51 பேர்; ஆய்வு முடிவு வெளியீடு
x
தினத்தந்தி 5 Oct 2022 1:13 PM GMT (Updated: 2022-10-05T19:00:41+05:30)

உலக அளவில் ஆசியாவில் 32 கோடி பேர் வறுமையில் உள்ளபோதும், 950 கோடீசுவரர்கள் உள்ளனர் என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.லண்டன்,உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவியதும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கம் காணப்பட்டது. எனினும், இந்த நெருக்கடியால் 500 பேர் வரை கோடீசுவரர்கள் அந்தஸ்துக்கு உயர்ந்து உள்ளனர் என ஆக்ஸ்பேம் ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

அதன்படி, கொரோனா காலத்தில் ஒவ்வொரு 30 மணிநேரத்திற்கு ஒரு கோடீசுவரர் உருவாகி உள்ளார். எனினும், 2022-ம் ஆண்டில் 10 லட்சம் பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 32 கோடி ஆசியர்கள் வறுமையில் வாடி வருகின்றனர் என தெரிவிக்கின்றது.

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் 2,400 கோடீசுவரர்களில், 950 கோடீசுவரர்கள் ஆசியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வடஅமெரிக்கா (777 கோடீசுவரர்கள்), ஐரோப்பா (536 கோடீசுவரர்கள்) அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

ஆசிய பட்டியலில், முதல் இடத்தில் சீனா உள்ளது. சீனாவில் 440 பேர் கோடீசுவரர்களாக உள்ளனர். இதற்கடுத்து, இந்தியாவில் 116 கோடீசுவரர்கள் உள்ளனர். தைவான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட 10 ஆசிய நாடுகளில் 114 கோடீசுவரர்கள் உள்ளனர்.

இவர்களில் இந்தியாவில் உள்ள பாதி கோடீசுவரர்கள் மும்பை நகரில் (51 பேர்) வசித்து வருகின்றனர். மும்பையில், உலகின் 9-வது பணக்காரரான முகேஷ் அம்பானி உள்பட பல பணக்காரர்கள் வசித்து வருகின்றனர்.


Next Story