தங்கம் கடத்தி சென்ற 4 பேர் - தகவலளித்த இந்தியா, தட்டி தூக்கிய இலங்கை


தங்கம் கடத்தி சென்ற 4 பேர் - தகவலளித்த இந்தியா, தட்டி தூக்கிய இலங்கை
x

இலங்கை கொழும்பு விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த 4 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கொழும்பு,

இலங்கை கொழும்பு விமான நிலையத்தில் சென்னையில் இருந்து சென்ற 4 இலங்கை நாட்டவர் 22 கிலோ எடையுள்ள தங்கத்தைக் கடத்திவந்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 3 பேர் துபாயிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அளித்த தகவலின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

தங்க நகைகளை அடையாளம் காண முடியாத வகையில் வர்ணம் பூசியும், தங்க துகள்களை கேப்சூலில் அடைத்தும் கடத்தி வரப்பட்ட நிலையில், இவற்றின் மதிப்பு 40 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தகவலளித்த இந்திய அதிகாரிகளுக்கு இலங்கை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story