சூடான்: விமானம் விபத்தில் சிக்கியதில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு


சூடான்:  விமானம் விபத்தில் சிக்கியதில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 July 2023 1:16 AM GMT (Updated: 24 July 2023 1:20 AM GMT)

சூடானில் தொழில் நுட்ப கோளாறால் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 4 ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

கார்டூம்,

சூடான் நாட்டில் கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் சம்பவத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர். எனினும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில், போர் நடந்து 100-வது நாளை எட்டிய நிலையில், சூடான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று சென்றது. திடீரென அது விபத்தில் சிக்கியது. இதுபற்றி சூடான் ராணுவம் பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு செய்தியில், ஆன்டனோவ் பயணிகள் விமானம் ஒன்று தொழில் நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 4 ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை உயிர் தப்பியது என தெரிவித்து உள்ளது. போர் 100-வது நாளை எட்டிய நிலையில், நேற்று தர்பர் பகுதியில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த போரால், ஆயிரக்கணக்கான குடிமக்கள் எல்லையை கடந்து வேறு பகுதிகளுக்கு தப்பி ஓடுகின்றனர்.


Next Story