ஈராக்கில் ரத்த கசிவு காய்ச்சலால் 90 பேர் பாதிப்பு; 18 பேர் பலி


ஈராக்கில் ரத்த கசிவு காய்ச்சலால் 90 பேர் பாதிப்பு; 18 பேர் பலி
x
தினத்தந்தி 22 May 2022 10:04 AM GMT (Updated: 22 May 2022 11:03 AM GMT)

ஈராக்கில் ரத்த கசிவு காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டும், 18 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

பாக்தாத்,

ஈராக் நாட்டின் சுகாதார மந்திரியின் செய்தி தொடர்பாளர் சைப் அல்-பாதர் வெளியிட்டுள்ள செய்தியில், சமீபத்தில் ஈராக்கில் ரத்த கசிவு ஏற்படுத்தும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு நடந்த பரிசோதனையில், பாதிப்பு உறுதியானால் இந்த எண்ணிக்கை இன்னும் உயர கூடும் என தெரிவித்து உள்ளார்.

முதன்முறையாக கடந்த மாதத்தில் தி குவார் என்பவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் மற்ற மாகாணங்களிலும் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த ரத்த கசிவு வைரஸ் காய்ச்சலானது, எபோலா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு குழுக்களாக உள்ள வைரசுகளால் ஏற்படுகிறது. இதனால், மனிதர்களின் உடலில் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து, பாதிப்பு கண்டவருக்கு காய்ச்சல் மற்றும் ரத்த கசிவு ஏற்படும். இதுவரை ஈராக்கில் ரத்த கசிவு காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டும் 18 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இந்த பாதிப்புகளுக்கு எந்த வகையான வைரசுகள் காரணம் என ஈராக்கிய சுகாதார அமைச்சகம் தகவல் எதனையும் வெளியிடவில்லை.


Next Story