இத்தாலி: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி


இத்தாலி: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
x

மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ரோம்,

இத்தாலி தலைநகர் ரோம் அருகே டிவொலி பகுதியில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையின் மேல்தளத்தில் தீ வேகமாக பரவியது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு, மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மருத்துவமனையில் சிக்கித்தவித்த நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர். ஆனாலும் இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story