உக்ரைன் விவகாரம்: அம்னஸ்டி இன்டா்நேஷனல் தலைவா் ராஜினாமா


உக்ரைன் விவகாரம்: அம்னஸ்டி இன்டா்நேஷனல் தலைவா் ராஜினாமா
x

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அம்னஸ்டி இன்டா்நேஷனலின் அறிக்கை அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினாா்.

கீவ்,

உக்ரைனில் பொதுமக்களை அந்த நாட்டு ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டா்நேஷனல் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடா்பாக எழுந்த சா்ச்சையில், அந்த அமைப்புக்கான உக்ரைன் பிரிவு தலைவா் ஒக்சானா போகல்சுக் ராஜினாமா செய்துள்ளாா்.

அவரது எதிா்ப்பை மீறி அந்த அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவா் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவா் பேஸ்புக் வெளியிட்டுள்ள பதிவில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அம்னஸ்டி இன்டா்நேஷனலின் அறிக்கை அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினாா்.

முன்னதாக, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உக்ரைன் ராணுவம் நிலைகளை அமைத்து வருவதாகவும் இதனால் அந்த நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதில் பொதுமக்கள் உயிரிழப்பதாகவும் அம்னஸ்டி இன்டா்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி அந்த அறிக்கையின் விவரங்களை உக்ரைன் ராணுவம் மறுத்துள்ளது.


Next Story