மகன் இறுதி சடங்கில் 9 குழந்தைகள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை....!


மகன் இறுதி சடங்கில் 9 குழந்தைகள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை....!
x
தினத்தந்தி 24 July 2023 2:08 PM IST (Updated: 24 July 2023 2:17 PM IST)
t-max-icont-min-icon

அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார்.

கின்சாகா:

காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 9 குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து பலியானார்கள்.

பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story