வியாழன் கிரகத்தின் நிலவுகளை ஆராயும் முயற்சி - அரியன் 5 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் தள்ளிவைப்பு


வியாழன் கிரகத்தின் நிலவுகளை ஆராயும் முயற்சி - அரியன் 5 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் தள்ளிவைப்பு
x

Image Courtesy : @esa twitter

வானிலை சாதகமாக இல்லாத காரணத்தால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ்,

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. இது பூமியை போல் 1,300 மடங்கு பெரியது. தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழலாம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையே வியாழன் கிரகத்தின் மூன்று பெரிய நிலவுகளில் உயிர்கள் வாழ உள்ளதா என்று ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது. அதன்படி ஜூஸ் மிஷன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வுக்காக 'அரியன் 5' என்ற ராக்கெட் ஏவப்பட உள்ளது.

பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று மாலை 5.45 மணிக்கு ராக்கெட் ஏவப்பட இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. வானிலை சாதகமாக இல்லாத காரணத்தால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், நாளை இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story