ஈராக்: பாக்தாத்தில் கால்பந்து மைதானம் அருகே குண்டுவெடிப்பு - 10 வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!


ஈராக்: பாக்தாத்தில் கால்பந்து மைதானம் அருகே குண்டுவெடிப்பு - 10 வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!
x
தினத்தந்தி 30 Oct 2022 7:03 AM IST (Updated: 30 Oct 2022 7:05 AM IST)
t-max-icont-min-icon

இந்த வெடி விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாக்தாத்,

ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், சம்பவம் நடந்த மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மைதானம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இந்த வெடி விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

1 More update

Next Story