சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது; விமானம், ரெயில் சேவைகள் தொடக்கம்


சீனாவில் கொரோனா பாதிப்பு  குறைந்தது; விமானம், ரெயில் சேவைகள் தொடக்கம்
x

Photo Credit: AFP 

கடந்த இரு மாதங்களாக மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த பெய்ஜிங், ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

பெய்ஜிங்,

சீனாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா பரவல் வேகம் எடுத்தது. இதனால், மீண்டும் மிகக்கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தியது. இதனால், தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த இரு நகரங்களிலும் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது பொருளாதார ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொழில்துறைகள்,உற்பத்தி துறைகள் முடங்கின. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதையடுத்து, ஷாங்காய், பெய்ஜிங் நகரங்களில் ரெயில், விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது.

1 More update

Next Story