ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்த்தி பிரபாகர் நியமனம்..!!


ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்த்தி பிரபாகர் நியமனம்..!!
x

Image Courtesy : defense.gov / AFP 

அதிபரின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்த்தி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ஆர்த்தி பிரபாகர் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ அறிக்கையில், டாக்டர் ஆர்த்தி பிரபாகர் அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை தலைமை ஆலோசகராகவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்களின் அதிபர் கவுன்சிலின் இணைத் தலைவராகவும் நியமிக்கப்படுவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் அமைச்சரவையின் உறுப்பினராகவும் இருப்பார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

63 வயதான ஆர்த்தி, இந்தியாவில் பிறந்தவர். பின்னர் அமெரிக்காவில் குடியேறிய இவர் 7 ஆண்டுகள் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story