ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா - 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்த குழு..!!


ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா - 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்த குழு..!!
x

Image Courtesy : Twitter @blueorigin

6 பேரும் சுமார் பூமியில் இருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தனர்.

டெக்சாஸ்,

மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. குறிப்பாக ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் தற்போது ப்ளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் 5-வது முறையாக 6 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் குழு விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர்.

நியூ ஷெப்பர்ட் என்ற விண்கலத்தில் மேற்கு டெக்சாஸில் உள்ள ஒரு பாலைவன இடத்திலிருந்து இவர்கள் நேற்று புறப்பட்டனர். இவர்கள் 6 பேரும் சுமார் பூமியில் இருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தனர். விண்வெளியில் இவர்கள் ஈர்ப்பு விசையை இழந்து விண்ணில் மிதந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது போன்று மேலும் பலரை அடுத்துதடுத்த மாதங்களில் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்ல ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பயணத்திற்கான டிக்கெட் விலை குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

1 More update

Next Story