விமானத்தில் இருந்து கழன்று விழுந்த டயர்... அதிர்ஷ்டவசமாக விபத்தின்றி தப்பியது...!


விமானத்தில் இருந்து கழன்று விழுந்த டயர்... அதிர்ஷ்டவசமாக விபத்தின்றி தப்பியது...!
x

இத்தாலியில் போயிங் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் லேண்டிங் கியர் பகுதின் கீழ் இருந்த டயர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ரோம்,

போயிங் 787 ட்ரீம்லைனர் உதிரிபாகங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ராட்சத விமானம் இத்தாலியில் உள்ள டரன்டோவில் இருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் சார்லஸ்டனில் நகருக்கு செல்ல இருந்தது.

ட்ரீம்லிஃப்டரின் தரையிறங்கும் கியர் பகுதியில் இருந்த டயர்கள் தரையில் இருந்து சில மீட்டர்கள் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்தது.இதனால் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை அங்கிருந்த ஊழியர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் விமானத்திற்கு முறையான தகவல் கொடுத்து விபத்தின்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

1 More update

Next Story