ஆப்கானிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு - 14 போ் பலி


ஆப்கானிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு - 14 போ் பலி
x
தினத்தந்தி 25 May 2022 8:37 PM GMT (Updated: 25 May 2022 9:10 PM GMT)

ஆப்கானிஸ்தான் நாட்டில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 14 போ் பலியாகி உள்ளனா்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் நகரத்தில் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நேற்று மாலையில் பலா் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது மசூதி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இதில் வழிபட்டு கொண்டிருந்த 5 போ் பாிதாபமாக உயிாிழந்தனா்.

மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் 5 போ் உயிாிழந்துள்ளதாகவும், 22 போ் காயமடைந்துள்ளதாக மருத்துவ நிா்வாகம் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல நாட்டின் வட பகுதியில் உள்ள மசார்-இ-ஷெரீப் என்ற நகரத்தில் மினி பஸ் மீது 3 குண்டுகள் வீசப்பட்டது. இதில் 9 போ் உயிாிழந்தனர் என்றும், 15 போ் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story