அர்ஜென்டினாவில் குண்டுவெடிப்பு- லெபனானில் உள்ள 4 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம்


அர்ஜென்டினாவில் குண்டுவெடிப்பு- லெபனானில் உள்ள 4 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம்
x

கோப்புப்படம் 

இந்த பயங்கர சம்பவத்தில் லெபனான் நாட்டை சேர்ந்த 4 பேர் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் கடந்த 1994-ம் ஆண்டு பழமையான கட்டிடம் ஒன்று வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி மூலம் வெடிக்க செய்யப்பட்டது. இதில் 85 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பல கலாசார, பாரம்பரிய பொருட்கள் அழிக்கப்பட்டன. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அங்குள்ள கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த பயங்கர சம்பவத்தில் லெபனான் நாட்டை சேர்ந்த 4 பேர் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. எனவே அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச போலீசுக்கு லெபனான் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


Next Story