பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - 2 பேர் பலி


பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - 2 பேர் பலி
x
தினத்தந்தி 17 Oct 2023 2:05 AM GMT (Updated: 17 Oct 2023 2:57 AM GMT)

பெல்ஜியத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

பிரசெல்ஸ்,

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் நேற்று இரவு பயங்கரவாத தாக்குதல் நடந்தது. யூரோ கால்பந்து தொடரின் தகுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. பிரசெல்ஸ் நகரில் நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் - ஸ்வீடன் மோதின. ஆட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது, பைக்கில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார். இந்த கொடூர தாக்குதலில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பெல்ஜியம் - ஸ்வீடன் இடையேயான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளான். மேலும், தாக்குதல் நடத்திய பின் பயங்கரவாதி பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுள்ளான். அதில், அரபு மொழியில் பேசிய அந்த பயங்கரவாதி, கடவுளின் பெயரால் தாக்குதல் நடத்தி 2 பேரை கொன்றுவிட்டதாகவும் கூறினான்.

இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தலைமறைவான நிலையில் அவரை தேடும் பணிகள் பாதுகாப்புப்படையினர் துரிதமாக நடந்து வருகின்றனர்.


Next Story