கொரோனா பரவல் அதிகரிப்பு: உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமான மக்காவ் பிராந்தியத்தில் சூதாட்ட விடுதிகள் மூடல்


கொரோனா பரவல் அதிகரிப்பு: உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமான மக்காவ் பிராந்தியத்தில் சூதாட்ட விடுதிகள் மூடல்
x

கோப்புப்படம் AFP

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமான மக்காவ் பிராந்தியத்தில் சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளது.

மக்காவ்,

சீனாவின் தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்தியம் மக்காவ். இது உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமாக விளங்குகிறது. மக்காவ் அரசின் வருவாயில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு அங்குள்ள சூதாட்ட விடுதிகள் மூலமே கிடைக்கிறது.

இந்த நிலையில் மக்காவ் பிராந்தியத்தில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சுமார் 2½ ஆண்டுகளுக்கு பிறகு மக்காவ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன.

1 More update

Next Story