சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்து: 39 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்


சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்து: 39 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்
x

இந்தியப் பெருங்கடலில் சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர்.

பெய்ஜிங்,

சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல் ஒன்று மத்திய இந்தியப் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர்.

அவர்களில் 17 பேர் சீன பிரஜைகள், 17 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் மேலும் 5 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களாகும். இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story