டெஸ்லா கார்கள் நுழைய தடை விதிக்கவுள்ள சீன நகரம் - என்ன காரணம் தெரியுமா ?


டெஸ்லா கார்கள் நுழைய தடை விதிக்கவுள்ள சீன நகரம் - என்ன காரணம் தெரியுமா ?
x

Image Courtesy : AFP 

பெய்டெய்ஹேகிற்குள் டெஸ்லா கார்கள் நுழைய தடைவிதிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

பெய்டெய்ஹே,

சீனாவில் பெய்டெய்ஹே நகரத்தில் ஜூலை 1 ஆம் தேதி கோடைகால உச்சி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாடு இரண்டு மாதங்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடற்கரை நகரமான பெய்டெய்ஹேகிற்குள் டெஸ்லா கார்கள் நுழைய தடைவிதிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை பெய்டெய்ஹே போக்குவரத்து போலீஸ் பிரிகேட்டின் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

டெஸ்லாவின் மூன்றாவது மாடலில் உள்ள கார்களில் எட்டு கேமராக்கள் மற்றும் மில்லிமீட்டர்-அலை ரேடார் மற்றும் 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் உள்ளன. உச்சிமாநாட்டில் டெஸ்லா வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் மூலம் உளவு பார்க்கும் அச்சம் ஏற்படலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


1 More update

Next Story