கொழும்பு - சென்னை விமானம் தாமதம்.. காரணம் என்ன.?


கொழும்பு - சென்னை விமானம் தாமதம்.. காரணம் என்ன.?
x

இந்திய அதிகாரி கைது செய்யப்பட்டதால், சென்னை வரும் விமானம் தாமதமானது.

கொழும்பு,

இலங்கை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் இருந்த இந்திய அதிகாரி கைது செய்யப்பட்டதால், சென்னை வரும் விமானம் தாமதமானது. கொழும்பு கட்டுநாயக்காவில் இருந்து சென்னை நோக்கி விமானம் புறப்பட இருந்தது.

இந்திய விமானத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தனது துப்பாக்கியுடன், விமான நிலைய பயணிகள் முனையத்திற்கு வந்துள்ளார். அவரை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதையடுத்து, இருநாட்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தூதரகங்கள் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது. சென்னை புறப்பட இருந்த விமானம் 4 மணி நேரம் தாமதமானது.

1 More update

Next Story