கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்- உலக சுகாதார அமைப்பு


கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்- உலக சுகாதார அமைப்பு
x

Image Courtesy: AFP 

கொரோனா தொற்று வழக்குகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

உலக அளவில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட கொரோனா தொற்று வழக்குகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்துமாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், "தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நாம் இதைவிட ஒருபோதும் சிறந்த நிலையில் இருந்ததில்லை. கொரோனா முற்றிலும் முடியவில்லை. ஆனால் அதன் முடிவு நமக்கு எட்டும் தூரத்தில் தான் உள்ளது.

இந்த வாய்ப்பை நாம் இப்போது பயன்படுத்தாவிட்டால், அதிக வைரஸ் மாறுபாடுகள், அதிக இறப்புகள், அதிக இடையூறுகள் ஆகியவற்றின் அபாயம் ஏற்படலாம்" என தெரிவித்தார்.


Next Story