டெல்லி புறப்பட்ட லுப்தான்சா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது


டெல்லி புறப்பட்ட லுப்தான்சா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது
x

கோப்புப்படம்

தினத்தந்தி 15 April 2023 8:12 PM GMT (Updated: 15 April 2023 8:13 PM GMT)

ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லிக்கு புறப்பட்ட லுப்தான்சா விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

புதுடெல்லி,

ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லிக்கு புறப்பட்ட லுப்தான்சா விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

ஜெர்மனியில் உள்ள பிரங்க்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு லுப்தான்சா LH-0760 விமானம் போயிங் 747-400 விமான நிறுவனம் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிற்பகலில் டெல்லி புறப்பட்ட இந்த விமானம் சில மணிநேரத்தில் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் பிரங்க்பேர்ட் விமான நிலையத்திற்கே கொண்டு செல்லப்படுவதாக கேப்டன் அறிவித்தார்.

பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாகி, பிராங்பேர்ட்டில் இருந்து சுமார் 2.20 மணியளவில் (உள்ளூர் நேரம்) புறப்பட்டது.


Next Story