உலக பொருளாதார தடைகளையும் தாண்டி ரஷிய பொருளாதாரம் தாக்குப்பிடித்து நிற்கிறது: அதிபர் புதின் பெருமிதம்!


உலக பொருளாதார தடைகளையும் தாண்டி  ரஷிய பொருளாதாரம் தாக்குப்பிடித்து நிற்கிறது: அதிபர் புதின் பெருமிதம்!
x

உலக பொருளாதார தடைகளையும் தாண்டி அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், ரஷிய பொருளாதாரம் தாக்குப்பிடித்து நிற்கிறது என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

சோச்சி,

ரஷியா-உக்ரைன் போர் 87வது நாளாக நடைபெற்று வருகிறது. ரஷிய படையெடுப்பு துருப்புக்கள், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரேனிய நகரங்களில் தங்கள் தாக்குதல்களை அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பெலாரஸ் நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சோச்சியில் உள்ள கருங்கடல் ரிசார்ட்டில் சந்தித்து பேசினார்.

உலக பொருளாதார தடைகளையும் தாண்டி அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், ரஷிய பொருளாதாரம் நன்றாக தாக்குப்பிடித்து நிற்கிறது என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்ட அடியை ரஷிய பொருளாதாரம் தாங்கி வருகிறது. அது மிகவும் தகுதியுடன் தாங்குகிறது. அனைத்து முக்கிய பொருளாதார குறிகாட்டிகளும் இதை வெளிக்காட்டுகின்றன. எனினும், ரஷியாவில் பொருளாதார நிலைமைக்கு எங்கள் அதிகாரிகளின் சிறப்பு முயற்சிகள் தேவை. அந்த முயற்சிகள் நேர்மறையான விளைவை உருவாக்குகின்றன என்பதையே நான் ஒட்டுமொத்தமாக வலியுறுத்த விரும்புகிறேன்" என்றார்.


Next Story