உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியில் தான் முடியும் - ரஷிய அதிபர் புதின் கருத்து


உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியில் தான் முடியும் - ரஷிய அதிபர் புதின் கருத்து
x
தினத்தந்தி 27 Jun 2023 2:42 AM GMT (Updated: 27 Jun 2023 3:41 AM GMT)

உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியில் தான் முடியும் என்று ரஷிய அதிபர் புதின் கருத்து தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் வாக்னர் குழு என்ற தனியார் கூலிப்படையும் இணைந்து செயல்பட்டது. ரஷியாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சி 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டாலும், ரஷியா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த சம்பவம் அதிபர் புதினுக்கு பின்னடைவாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாக்னர் படையின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாவது:-

ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில் தான் முடியும். ரஷிய ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும் என மேற்கு நாடுகள் விரும்புகின்றன. வாக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷ்ய மக்களுக்கு நன்றி. வாக்னர் படை ரஷிய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு செல்லலாம்.

ரஷியாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி. வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதிப்பதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story