இங்கிலாந்து துணை பிரதமராக டொமினிக் ராப் நியமனம்: பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை!


இங்கிலாந்து துணை பிரதமராக டொமினிக் ராப் நியமனம்: பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை!
x

புதிய பிரதமர் ஆக ரிஷி சுனக் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கியுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார்.டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் துணைப் பிரதமர் பதவியில் இருந்தவர்.

முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் பதவியில் இருந்த பலரை ராஜினாமா செய்யுமாறு புதிய பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார். புதிய பிரதமர் ஆக ரிஷி சுனக் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கியுள்ளார்.

அதன்படி, வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ், வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்ட் ஆகியோர் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அலோக் சர்மா மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்தின் நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் நீடிக்கிறார்.நாதிம் ஜஹாவிக்கு புதிதாக மந்திரி சபையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவருக்கான துறை ஒதுக்கப்படவில்லை.

பென் வாலஸ் மீண்டும் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜேம்ஸ் கிலெவர் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற கருவூலத்தின் செயலாளராக சைமன் ஹார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story