வறட்சி காரணமாக 6 மாதங்களில் 205 யானைகள் பலி - கென்யாவில் அதிர்ச்சி


x

மோசமான வறட்சி நிலவி வரும் நிலையில், கென்யாவில் யானைகள் அடுத்தடுத்து இறந்து வருவதாக உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

நைரோபி,

40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சி நிலவி வரும் நிலையில், கென்யாவில் யானைகள் அடுத்தடுத்து இறந்து வருவதாக டபிள்யூ.டபிள்யூ.எப் (WWF) என்ற உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

போதுமான நீர் மற்றும் உணவு இல்லாததால் பல யானைகளும், யானைக் குட்டிகளும் நிற்கக்கூட முடியாமல் சிரமப்படும் வீடியோ காட்சிகளை டபிள்யூ.டபிள்யூ.எப் அமைப்பு பகிர்ந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் வறட்சியால் 205 யானைகள் இறந்துவிட்டதாக கென்யாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் பெனினா மலோன்சா தெரிவித்துள்ளார்.


Next Story