'எக்ஸ்' தளத்தில் பயனரின் ஒப்புதலுடன் மட்டுமே 'பயோமெட்ரிக்' தகவல்கள்:எலான் மஸ்க் அறிவிப்பு


எக்ஸ் தளத்தில் பயனரின் ஒப்புதலுடன் மட்டுமே பயோமெட்ரிக் தகவல்கள்:எலான் மஸ்க் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Sep 2023 12:16 AM GMT (Updated: 3 Sep 2023 6:07 AM GMT)

தற்போது எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் கைரேகைகள் உள்பட பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து வருகிறது.

வாஷிங்டன்,

பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் சமூக வலைதளத்தை கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார். அதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். ஜூலை பிற்பகுதியில், டுவிட்டரின் லோகோ மாற்றப்பட்டு 'எக்ஸ்' சமூக வலைதளமாக மாறியது.

தற்போது எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் கைரேகைகள் உள்பட பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து வருகிறது. ஆகஸ்டு மாதம் இறுதிவரை எக்ஸ் சமூக வலைதளம் பயோமெட்ரிக் தகவல்கள் எதையும் கேட்டது இல்லை.

தற்போது பயனர்களின் ஒப்புதலின் அடிப்படையில் பாதுகாப்பு, மற்றும் அடையாள நோக்கங்களுக்காக உங்கள் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம் அளித்து உள்ளார். இது முற்றிலும் பயனரின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும் அவர் கூறி உள்ளார்.


Next Story