டெஸ்லா நிறுவனத்தின் 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார் எலான் மஸ்க்


டெஸ்லா நிறுவனத்தின் 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார் எலான் மஸ்க்
x

Image Courtesy: AFP

இந்திய மதிப்பில் சுமார் 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை மஸ்க் விற்றுள்ளார்.

வாஷிங்டன்,

உலக பெரும் பணக்காரராரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை சமீபத்தில் கைவிட்டார். டுவிட்டரில் உள்ள போலி கணக்கு விவரங்கள் குறித்த தரவுகள் இல்லை என கூறி இந்த ஒப்பந்தத்தை மஸ்க் கைவிட்டார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகள் விற்கப்பட்டன. அப்போது டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் மஸ்க் இருந்ததால் அதற்காக பணம் திரட்ட அந்தப் பங்குகள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் எலான் மஸ்க் மீண்டும் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை விற்றுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 54 ஆயிரம் கோடியாகும். ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9-க்கு இடையில் டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 79 லட்சத்திற்கும் மேற்பட்ட பங்குகளை அவர் விற்றுள்ளார். கடந்த 10 மாதங்களில் மட்டும் 3 ஆயிரத்து 200 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story