சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா கார்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டம்? எலான் மஸ்க் பதில்


சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா கார்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டம்? எலான் மஸ்க் பதில்
x

சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா கார்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

நியூயார்க்,

சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா கார்களை டெஸ்லா நிறுவனம் விரைவில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய தயாராகி வருவதாக வெளியான தகவலை டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மறுத்துள்ளார்.

சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள டெஸ்லா தொழிற்சாலை ஆண்டுக்கு 1.1 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மாடல் 3 செடான்கள் மற்றும் மாடல் ஒய் கிராஸ்ஓவர்களை உற்பத்தி செய்யும் ஷாங்காய் ஆலை, தற்போது இந்த வாகனங்களை சீனாவில் விற்பனை செய்து ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லாவின் மாடல் 3 செடான்கள் மற்றும் மாடல் ஒய் கிராஸ்ஓவர் கார்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வட அமெரிக்காவிற்கு கொண்டு வர டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. சீனாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் மாடல்களை அமெரிக்கா மட்டுமின்றி கனடாவிற்கும் ஏற்றுமதி செய்யும் திட்டத்தை மஸ்க் தயாரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட டெஸ்லா கார்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய தயாராகி வருவதாக வெளியான தகவலை டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மறுத்துள்ளார்.


Next Story