எங்களை ஐரோப்பிய யூனியனின் சேர்த்தால் ஸ்வீடனை நேட்டோவில் சேர்க்க அனுமதிப்போம் - துருக்கி கெடுபிடி


எங்களை ஐரோப்பிய யூனியனின் சேர்த்தால் ஸ்வீடனை நேட்டோவில் சேர்க்க அனுமதிப்போம் - துருக்கி கெடுபிடி
x

நேட்டோ ராணுவ அமைப்பில் சேர ஸ்வீடன் விண்ணப்பித்திருந்த நிலையில் இதில் தற்போது வரை இறுதி முடிவு எட்டப்படவில்லை.

அங்காரா,

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ அமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ஐரோப்பிய நாடுகளான ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவ அமைப்பில் இடம்பெறாமல் இருந்தது.

இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து போது நேட்டோ அமைப்பில் இணையாத ஸ்வீடன், பின்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் இணைய விண்ணப்பித்தன. நேட்டோ அமைப்பில் ஐரோப்பிய யூனியனில் இடம்பெறாத துருக்கி நேட்டோ அமைப்பின் உறுப்பினராக உள்ளது.

நேட்டோ அமைப்பில் புதிதாக ஒரு நாடு உறுப்பினராக வேண்டுமானால் அந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும் புதிதாக உறுப்பினராக சேர விண்ணப்பித்துள்ள நாடு நேட்டோ அமைப்பில் சேர முடியாது.

இந்த சூழ்நிலையில் நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் சேர துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் துருக்கியை உறுப்பினராக சேர்க்க அனுமதித்தால் ஸ்வீடனை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர்க்க அனுமதிப்போம் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் சேர துருக்கி விண்ணப்பித்துள்ள நிலையில் அந்த விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் உடன் துருக்கி மோதல் போக்கு கொண்டுள்ளதால் அந்த விண்ணப்பம் நிலுவையில் உள்ளது.

தற்போது நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் சேர வேண்டுமானால் எங்களை ஐரோப்பிய யூனியனில் சேர்க்க வேண்டும் என துருக்கி கெடு விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story