செயலிழந்த செயற்கைகோள் பூமியில் விழும் அபாயம்-ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அச்சம்


செயலிழந்த செயற்கைகோள் பூமியில் விழும் அபாயம்-ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அச்சம்
x

மாதிரிப்படம்- (File)

செயற்கை கோளை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் எங்கு விழும் என சொல்லமுடியவில்லை

பாரீஸ்,

கடந்த 1990-ம் ஆண்டில் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு செயற்கைகோளை ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. 'கிராண்ட்பாதர்' என பெயரிடப்பட்ட இந்த விண்கலனை ஐரோப்பா விண்வெளி நிறுவனம் கட்டுப்படுத்தி இயக்கி வந்தது. இதனையடுத்து அதன் ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையை விட்டு விலகியது.

இந்தநிலையில் கிராண்ட்பாதர் செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் இறுதிக்குள் அது பூமியில் விழலாம் என கணக்கீடப்பட்டு உள்ளது.

இதனை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் எங்கு விழும் என சொல்லமுடியவில்லை, இருப்பினும் ஐரோப்பாவில் உள்ள கடல்களில் விழ வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் பெருமளவிலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Next Story