எஸ்டோனியா பிரதமர் ராஜினாமா


எஸ்டோனியா பிரதமர் ராஜினாமா
x

காஜா கல்லாஸ் எஸ்டோனியாவின் 3½ ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்துள்ளார்.

தாலின்,

ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் பிரதமர் காஜா கல்லாஸ் (வயது 47). கடந்த 3½ ஆண்டுகளாக பிரதமராக இருந்த இவர் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்தார்.

இதனையடுத்து அவரது ராஜினாமா கடிதத்துக்கு அதிபர் அலார் காரிஸ் நேற்று ஒப்புதல் அளித்தார். எனவே புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story