அத்தகைய படங்களை கன்னியாஸ்திரிகள் கூட பார்க்கிறார்கள் - வேதனையில் போப்!


அத்தகைய படங்களை கன்னியாஸ்திரிகள் கூட பார்க்கிறார்கள் - வேதனையில் போப்!
x

கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாச படங்களை பார்ப்பதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

வாடிகன்

நிகழ்ச்சி ஒன்றில் போப் பிரான்சிஸ் கலந்துக் கொண்டார். அதில், மொபைல் பயன்பாடு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் கூறியதாவது:-

ஆபாசப் படம் பார்க்கும் தீமையான பழக்கம் இன்று பலருக்கும் உள்ளது. உலகில் பல கோடி பேருக்கு இந்த பழக்கம் இருக்கிறது.

அவ்வளவு ஏன் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரீகள் கூட ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டு உள்ளனர்.

மொபைல் உள்ளிட்ட சாதனங்களை நமது வளர்ச்சிக்காக பாசிட்டிவ் முறையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த டிஜிட்டல் ஆபாசம் தொடர்பாகப் பலருக்கும் பல விதமாகக் கேள்விகள் இருக்கலாம்.

பல சாமானியர்கள், சாதாரண பெண்கள், அவ்வளவு ஏன் பாதிரியார்களுக்கும் கூட இது ஒரு தீமையாகவே உள்ளது. நான் சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் கிரிமினல் ஆபாசப் படங்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. மைனர்களை பயன்படுத்தும் ஆபாசப் படங்கள் ஏற்கனவே சட்டப்படி தவறு.

அதைத் தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நான் வழக்கமான ஆபாசப் படங்களைச் சேர்த்தும் தான் சொல்கிறேன். யாரும் தங்கள் மொபைலில் ஆபாசப் படங்களை வைத்து இருக்கக் கூடாது. உடனடியாக ஆபாசப் படங்களை டெலிட் செய்து விடுங்கள். அப்போது தான் எந்தவொரு சலனமும் ஏற்படாது.

ஆன்லைனில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் பல ஆபத்துகள் ஏற்படுகிறது. அது நமது இதயத்தைப் பலவீனப்படுத்துகிறது.

நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆபாசப் படங்களைப் பார்ப்பது நமது ஆன்மாவையும் சேர்த்துப் பலவீனப்படுத்துகிறது. இதன் மூலம் தீய சக்திகள் நமக்குள் நுழைகிறது.

இது நமது இதயத்தையும் சேர்த்தே பலவீனப்படுத்துகிறது. இயேசு நமக்கு கொடுத்துள்ள தூய்மையான இதயம் இந்த ஆபாசத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை" என்றார்.


Next Story