ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் நுழைந்து முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரை கொல்ல முயற்சி!


ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் நுழைந்து முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரை கொல்ல முயற்சி!
x

ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காபுல்,

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யாரைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் ஆக ஹெக்மத்யார் உள்ளார். ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் உள்ளார்.

இந்நிலையில், ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் நேற்று கூடியிருந்த மசூதிக்குள், சந்தேகிப்படும் வகையில் பயங்கரவாதிகள் சிலர், பர்தா அணிந்தபடி நுழைந்து ஹெக்மத்யாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

1 More update

Next Story