முட்டை போல் பிதுங்கி வெளியே வரும் கண்கள்! - உலகின் அதிசய மனிதர்


முட்டை போல் பிதுங்கி வெளியே வரும் கண்கள்! - உலகின் அதிசய மனிதர்
x

கண்விழிகளை அதிக தூரம் வெளியே கொண்டு வந்து பிரேசிலைச் சேர்ந்த நபர் வித்தியாசமான கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

பிரேசில்,

கண்கள் பெரிதாக இருப்பவர்களைப் பார்த்தால் நம் ஊர்பக்கங்களில் "முட்டைக் கண்ணாக" இருக்கிறது என்று கிண்டல் செய்வார்கள்.

ஆனால், அந்த முட்டைக் கண்களுக்கே டப் கொடுக்கும் வகையில், உண்மையாகவே கண்களுக்குள் இருந்து 2 முட்டைகள் வெளியில் எட்டிப் பார்ப்பதைப் போல கண்விழிகளை அதிக தூரம் வெளியே தள்ளி அதிர்ச்சியளிக்கும் கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார் பிரேசிலைச் சேர்ந்த சிட்னி டி கார்வாலோ மெஸ்கிடா.

தனது கண் இமைகளை விட்டு 18.2 மில்லி மீட்டர் தூரம் விழிகளை வெளியில் கொண்டு வந்து மெஸ்கிடா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


Next Story