ஆஸ்திரேலியாவில் 3 வயது குழந்தையை குத்திக்கொன்ற தந்தை


ஆஸ்திரேலியாவில் 3 வயது குழந்தையை குத்திக்கொன்ற தந்தை
x

குழந்தையின் தந்தையே இந்த கொடூர செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. மர்மநபர் ஒருவர் திடீரென அந்த குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 3 வயது ஆண் குழந்தை ஒன்று ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அதன் அருகில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காயங்களுடன் உயிருக்கு போராடி வந்தார்.

அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தையின் தாய் படுகொலை செய்யப்பட்டார். இதனால் தாயின் உறவினரான 45 வயது நபர் பராமரிப்பில் அந்த குழந்தை வளர்ந்தது. இந்த நிலையில் இறந்த குழந்தையின் தந்தையே இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story