தென்கொாியா : அலுவலக கட்டிடத்தில் தீவிபத்து - 7 போ் பலி


தென்கொாியா : அலுவலக கட்டிடத்தில் தீவிபத்து - 7 போ் பலி
x

தென்கொாியா, டேகு நகாில் உள்ள அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 7 போ் உயிாிழந்து உள்ளனா்.

சியோல்,

தென் கொாியா நாட்டில் உள்ள டேகு நகாில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் பின்புறம் 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்த அலுவலகத்தில் தீடீரென தீ பற்றியது. கண் இமைக்கும் நேரத்தில் தீயானது அலுவலகம் முழுவதும் மலமலவென பரவியது.

உடனே இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த தீ விபத்தில் 7 போ் தீயில் கருகி பாிதாபமாக உயிாிழந்தனா். 35-க்கும் மேற்பட்டவா்கள் காயம் அடைந்துள்ளனா். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 9-க்கும் மேற்பட்டவா்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

1 More update

Next Story