அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் பதவியேற்பு


அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் பதவியேற்பு
x

image courtesy: Judge Manpreet Monica Singh facebook

அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்றார்.

ஹூஸ்டன்,

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதி ஆனார். கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் கோர்ட்டின் நீதிபதியாக மோனிகா பதவியேற்றார்.

ஹூஸ்டனில் பிறந்து வளர்ந்த மோனிகா தற்போது தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெல்லாயரில் வசிக்கிறார். மோனிகாவின் தந்தை 1970-களின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 20 ஆண்டுகளாக வக்கீலாக இருந்த மோனிகா உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவில் பல சிவில் உரிமை அமைப்புகளில் ஈடுபட்டுள்ளார்.

பதவியேற்பு விழாவில் பேசிய மோனிகா, ஹூஸ்டனை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.

பதவியேற்பு விழாவிற்கு மாநிலத்தின் முதல் தெற்காசிய நீதிபதியான இந்திய-அமெரிக்க நீதிபதி ரவி சாண்டில் தலைமை வகித்தார். விழாவில் பேசிய சாண்டில், "சீக்கிய சமூகத்திற்கு இது ஒரு பெரிய தருணம். மன்பிரீத் சீக்கியர்களுக்கான தூதுவர் மட்டுமல்ல, நிறமுள்ள அனைத்து பெண்களுக்கும் தூதுவர்" என்று கூறினார்.

மேலும் ஹூஸ்டன் மேயர் சில்வெஸ்டர் டர்னர் கூறும்போது "இது சீக்கிய சமூகத்திற்கு ஒரு பெருமையான நாள். கோர்ட்டின் பன்முகத்தன்மையில் ஹூஸ்டன் நகரத்தின் பன்முகத்தன்மையைக் காணும் அனைத்து வண்ண மக்களுக்கும் இது ஒரு பெருமையான நாள்" என்று கூறினார்.

அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஹூஸ்டன் பகுதியில் 20,000 சீக்கியர்கள் வாழ்கின்றனர்.


Next Story