கட்டுப்பாட்டு அறையில் தொழில் நுட்ப கோளாறு: சுவிட்சர்லாந்து வான்வெளி மூடல்


கட்டுப்பாட்டு அறையில் தொழில் நுட்ப கோளாறு: சுவிட்சர்லாந்து வான்வெளி மூடல்
x

கோப்புப்படம்

கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக சுவிட்சர்லாந்து வான்வெளி மூடப்பட்டது.

ஜெனிவா,

சுவிட்சர்லாந்தில் 'ஸ்கைகைய்டு' என்கிற தனியார் நிறுவனம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவையை வழங்கி வருகிறது. சுவிட்சர்லாந்தின் வான்வெளியை நிர்வகிப்பது மற்றும் கண்காணிப்பது இதன் தலையாய பணியாகும்.

இந்த நிலையில் நேற்று காலை இந்த நிறுவனத்தின் கம்ப்யூட்டர் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் வான்வெளி கண்காணிப்பில் சிக்கல் எழுந்தது.

அதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக சுவிட்சர்லாந்து வான்வெளி மூடப்பட்டது. அதாவது, சுவிட்சர்லாந்து வான்வெளியில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டன. இதனால் சுவிட்சர்லாந்தில் இருந்து புறப்பட இருந்த அனைத்து விமானங்களும் பயணத்தை ஒத்திவைத்தன. அதேபோல் சுவிட்சர்லாந்து நோக்கி வந்த விமானங்கள் இத்தாலியின் மிலன் நகருக்கு திருப்பப்பட்டன.சில மணி நேரங்களுக்கு பிறகு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது.


Next Story