அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்த தைவானுக்கு அழைப்பு..!!


அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்த தைவானுக்கு அழைப்பு..!!
x

கோப்புப்படம்

அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்த தைவானுக்கு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அழைப்பு விடுத்தார்.

தைபே,

தைவான் சுற்றுப்பயணம் சென்றுள்ள அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், அதிகரித்து வரும் சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்க அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்த தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "தைவானுக்கு எதிராக சீனாவும் ரஷியாவும் நடவடிக்கை எடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நாங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டும். தைவானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எடுத்தாலோ அல்லது அதைச் சுற்றி முற்றுகையிட முயற்சித்தாலோ, உடனடி பதிலில் மட்டுமல்ல, நீண்ட காலத்திற்கு சீனாவை சர்வதேசப் பொருளாதார அமைப்பில் இருந்து விலக்கி வைக்க நேரிடும்" என்று ஜான் போல்டன் கூறினார்.


Next Story
  • chat