நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு உயரிய விருது


நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு உயரிய விருது
x
தினத்தந்தி 6 Jun 2023 6:17 PM GMT (Updated: 6 Jun 2023 6:18 PM GMT)

நியூசிலாந்தின் 2-வது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வெல்லிங்டன்,

கடந்த 2017-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்ற ஜெசிந்தா ஆர்டெர்ன், உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றார். கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று அறிவித்தார்.

இந்நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் 2-வது மிக உயர்ந்த விருதான டேம் கிராண்ட் கம்பானியன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தேசமாக நாம் கடந்து வந்த பல விஷயங்கள் ஒரு தனிநபரை விட நம் அனைவரையும் பற்றியதாகும். இது எனது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான மற்றும் பலனளிக்கும் பாத்திரத்தை ஏற்க என்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story