ஊழல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர் கைது..!


ஊழல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர் கைது..!
x

ஊழல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளர்.

கோலாலம்பூர்,

மலேசியா நாட்டில் 2020 முதல் 2021 வரை பிரதமராக இருந்தவர் முகைதீன் யாசின். இவர் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக முகைதீன் யாசின் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊழல் வழக்கில் முகைதீன் யாசினை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் ஊழல் வழக்கில் 20 ஆண்டுகளும், பணமோசடி செய்ததற்காக 15 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

பதவியை விட்டு விலகிய பின்னர் குற்றம் சுமத்தப்படும் 2-வது பிரதமர் முகைதீன் யாசின் ஆவார். ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story