பிரான்ஸ் நாட்டில் குரங்கு அம்மை தடுப்பூசி மையம் திறப்பு


பிரான்ஸ் நாட்டில் குரங்கு அம்மை தடுப்பூசி மையம் திறப்பு
x

கோப்புப்படம்

பிரான்ஸ் நாட்டில் குரங்கு அம்மை தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.

பாரீஸ்,

உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிற குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு கடந்த 23-ந் தேதி அறிவித்தது. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் அதிக திறன் கொண்ட குரங்கு அம்மை தடுப்பூசி மையங்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் கடந்த வாரம் மட்டுமே 1,567 பேருக்கு இந்த நோய் தாக்கி இருப்பதும், தலைநகர் பாரீசில் மட்டும் 726 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பிரான்சில் 1,700-க்கு மேற்பட்டோர் குரங்கு அம்மை தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில்தான் அங்கு குரங்கு அம்மை தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.


Next Story