ஜி-20 உச்சி மாநாடு; கனடா பிரதமர் ட்ரூடோ இந்தியாவுக்கு வருகை


ஜி-20 உச்சி மாநாடு; கனடா பிரதமர் ட்ரூடோ இந்தியாவுக்கு வருகை
x

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

ஒட்டாவா,

நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில், வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பிற நாடுகளை சேர்ந்த குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இதனால், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய விமான படையின் போர் விமானங்கள் உள்பட அனைத்து பாதுகாப்பு முகமைகளும் இணைந்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு வருகை தருகிறார் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதுபற்றி கனடா பிரதமரின் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகருக்கு செல்ல இருக்கிறார்.

அவர் வருகிற செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள ஆசியன் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து, அவர் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் சிங்கப்பூருக்கு இருதரப்பு பயணம் மேற்கொள்கிறார்.

இதன்பின், வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஆகிய தினங்களில் இந்தியாவின் டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க இருக்கிறார் என தெரிவித்து உள்ளது.

உலகிலுள்ள மக்களின் வருங்காலம் சிறப்பாக அமைவதற்கான பணிகளை கட்டமைப்பதற்காக மற்றும் இன்றைய சர்வதேச நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச தலைவர்களுடன் இணைந்து பிரதமர் ட்ரூடோ பணியாற்றுவார்.

அவர், ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை ஊக்குவிப்பார். பருவநிலை மாற்றம், சர்வதேச நிதி மைய சீர்திருத்தம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, பாலின சமத்துவம் மற்றும் மேம்பட்ட சர்வதேச சுகாதாரம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டை அதிகரிப்பதற்காக அவர் பேசுவார் என அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story