உலகின் 6-வது பெரிய பணக்காரரான செர்ஜி பிரின் விவாகரத்து கோரி மனு தாக்கல்

Image Courtesy : AFP
மனைவி நிக்கோல் ஷனாஹனிடம் இருந்து விவாகரத்து கோரி பிரின் மனு தாக்கல் செய்துள்ளார்
கலிபோர்னியா,
கூகுள் இணை நிறுவனர் மற்றும் உலகின் 6-வது பெரிய பணக்காரர் செர்ஜி பிரின். இவர் தனது மனைவி நிக்கோல் ஷனாஹனிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
"சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகள்" என்பதை சுட்டிக்காட்டி செர்ஜி பிரின் இந்த மனுவை கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் தாக்கல் செய்துள்ளார். பிரின் சொத்து மதிப்பு சுமார் 94 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். செர்ஜி பிரினுக்கு தனது முதல் மனைவி அன்னே வோஜ்சிக்கி உடன் நடந்த முந்தைய திருமணம் 2015-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






