ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம்; 182 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம்;  182 பேர் பலி
x

Image Credit: ANI

ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.

இஸ்லமாபாத்,

ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. அங்குள்ள 13 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் வெள்ள பாதிப்பால் 63 பேர் பலியானதாக தலீபான்கள் அரசு தெரிவித்துள்ளது. மேலும் பலர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தலீபான்களின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு இதுவரை 182 பேர் கொல்லப்பட்டு இருக்ககூடும் என்று தகவல்கள் கூறுகின்றன." என்றார். ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story