சிட்னி நகரில் இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்


சிட்னி நகரில் இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
x

சிட்னி நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவில் சுவரை மர்ம நபர்கள் நேற்று சேதப்படுத்தினர்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சமீப காலமாக இந்து கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சிட்னி நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவில் சுவரை மர்ம நபர்கள் நேற்று சேதப்படுத்தினர். அங்கு வாழும் இந்துக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அந்த கோவிலில் காலிஸ்தான் கொடி பறந்ததையடுத்து தாக்குதல் நடத்தியது காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர். எனவே கோவிலை தாக்கிய அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பனீஸ் இந்தியா வந்திருந்தபோது கோவில்கள் மீதான தாக்குதல்களை ஆஸ்திரேலியா பொறுத்துக் கொள்ளாது என்று உறுதியளித்திருந்தார்.


Next Story